முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > ஒபாமாவுக்கு சம்பளம் எவ்வளவு ?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒபாமாவுக்கு சம்பளம் எவ்வளவு ?
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்கான ஊதியமாக ஆண்டுக்கு 4,00,000 டாலர் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் மொத்தம் 487 பணியாளர்கள் உள்ளனர்.இதில் அதிபரான ஒபாமாவுக்கு ஆண்டு ஊதியமாக 4,00,000 டாலர் அளிக்கப்படுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட சம்பள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ' த சிக்காகோ சன் டைம்ஸ் ' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமாவுக்கு அளிக்கப்படுவதுபோன்றே , வெள்ளை மாளிகையில் பணியாற்றும் இதர ஊழியர்களும் நல்ல ஊதியம் பெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அதிபரின் மூத்த ஆலோசகர் டேவிட் ஆக்ஸ்லார்ட் உள்ளிட்ட ஐந்து பேர் ஆண்டுக்கு 1,72,200 டாலர் ஊதியமாக பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஆப்கான் எல்லைக்கு பாகிஸ்தான் சீல்
முகாம்களை நிரந்தரமாக்க இலங்கை அரசு இரகசிய திட்டம்?
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சா‌ற்று
சான் சூகி விடுதலை கோரி பான் கி மூன் மியான்மர் பயணம்
இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்