ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள தனது தெற்கு வாசிரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு பாகிஸ்தான் சீல் வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள், கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த தாக்குதல் காரணமாக , அங்கிருந்து தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி விடாமல் தடுக்கும் விதமாக எல்லைகு சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அத்துடன் தெற்கு வாசிரிஸ்தான் எல்லைப் பகுதி நெடுகிலும் தனது துருப்புகளையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |