முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > முகாம்களை நிரந்தரமாக்க இலங்கை அரசு இரகசிய திட்டம்?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முகாம்களை நிரந்தரமாக்க இலங்கை அரசு இரகசிய திட்டம்?
கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இது தொடர்பான தமது கடுமையான கண்டனத்தை தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்தன. சீமெண்டுத் தரையை அமைக்கும் விடயம் மிகவும் செலவானதாகும்.இருந்தபோதிலும் மழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

அத்துடன், இந்நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தற்காலிக புகலிடம் தொடர்பிலான விதிமுறைகளை மீறுவதாகவும் அமைந்திருக்கின்றது. சீமெந்துத் தரையை அமைப்பது நிரந்தரக் கட்டுமானத்தின் அரைப்பகுதியாகும் என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இடம்பெயர்ந்தவர்களை அந்த இடத்தில் நீண்ட காலத்துக்கு இருப்பதாகச் செய்வதாக அமையும்.

'மெனிக்' பாம் பகுதியிலேயே இவ்வாறு நிரந்தரக் கட்டங்கள் அமைக்கப்படுகின்றன.இங்குள்ள ஆறு வலயங்களில் நான்கு வலயங்களுக்குள்தான் தம்மால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும், இரு வலயங்களுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சூனியப் பகுதி என மர்மமான பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதிகளுடம் அடக்கம் எனவும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதிக்குள் பணி புரிய தமக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், ஆனால் கட்டடங்கள் எழுப்பப்படுவதை தம்மால் வெளியில் இருந்தே பார்க்கக்கூடியதாக இருப்பதாகவும் உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் லண்டன் 'ரைம்ஸ்' வெளியிட்டுள்ள இது தொடர்பான செய்தியை லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.அகதிகளை 180 நாள் திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
<< 1 | 2 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சா‌ற்று
சான் சூகி விடுதலை கோரி பான் கி மூன் மியான்மர் பயணம்
இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
' யு.எஸ். மீதான ரஷ்யர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது '
ஈரான் கலவரம் : பிரிட்டன் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை