வட கொரியா மீண்டும் 6 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.
வடகொரியா ஏற்கனவே பரிசோதித்த பல்வேறு அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
அத்துடன் தென்கொரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே போர் மூளக்கூடும் என்ற பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது.
ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வடகொரியா நேற்று முன்தினமும் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக பரிசோதித்ததாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் , அமெரிக்காவை சீண்டிப்பார்க்கும் வகையில் அந்நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதையொட்டி , வட கொரியா இன்று மேலும் 6 ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.
ஜப்பான் கடற்பகுதியையொட்டி அமைந்துள்ள வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியிலுள்ள வான்சான் துறைமுகத்தின் அருகே இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வடகொரிய பாதுகாப்புத் துறை அமைச்சக் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த ஏவுகணை சோதனையை உறுதிபடுத்தியுள்ள தென்கொரிய இராணுவ அதிகாரிகள், முதல் 2 ஏவுகணைகள் இன்று காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள்ளும் , தொடர்ந்து காலை 10.30 மணியிலிருந்து அடுத்தடுத்து 5 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். |