முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இராணுவ கெடுபிடி காரணமாக உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் போவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட இரண்டு சிறுவர்களை வவுனியா அரச மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு படையினர் மறுத்ததால் குறிப்பிட இரண்டு சிறுவர்களும் பரிதாபகரமாக மரணமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

போதிய மருத்துவ வசதிகள் முகாம்களில் செய்துகொடுக்கப்படாத அதேவேளையில், வவுனியா அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செல்வதற்கும் நோயாளர்களுக்குப் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா முகாம்களில் காணப்படும் சுகாதாரச் சீர்கேடுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்ற அதேவேளையில், நோய் வாய்ப்படும் அகதிகளைப் பராமரிப்பதிலும் அவர்களுக்கான மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் படையினரின் கெடுபிடிகளால் பாதிக்கப்படும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்தக் கெடுபிடிகளால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே பலர் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

முகாமில் உள்ளவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்ற போதிலும், இவர்களை வெளிநோயாளர்களாகப் பார்வையிடுவதற்கு ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட வரிசையில் மருத்துவ சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அக்களை இவர்கள் ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவரும் இவை அனைத்தையும் மிகவும் அருகில் இருந்தே அவதானித்துக் கொண்டிருப்பதால் நோயாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகின்றது.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளி ஒருவருக்கு மேலதிக சிகிச்சை தேவை என அல்லது அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் கருதினால், குறிப்பிட்ட நோயாளிக்கு 'இடமாற்றப் பத்திரம்' ஒன்றை வழங்கி குறிப்பிட்ட முகாமின் மருத்துவ இணைப்பாளரிடம் அனுப்பிவைப்பார்.

இவ்வாறு இடமாற்றப் பத்திரத்துடன் வரும் ஒரு நோயாளியை வவுனியா அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதா இல்லையா என்பதை குறிப்பிட்ட மருத்துவ இணைப்பாளரே தீர்மானிப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

இந்த மருத்துவ இணைப்பாளர்கள் சிங்களவர்களாக இருப்பதுடன், மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு நியமனத்துக்காகக் காத்திருக்கும் அனுபவமற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். மருத்துவர்களின் இடமாற்றக் கோரிக்கையை இவர்கள் பெரும்பாலும் நிராகரித்துவிடுவதாகக் கூறப்படுகின்றது. இராணுவ அதிகாரிகளும் இவ்வாறு வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை முடிந்தளவுக்குக் குறைக்குமாறே இவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
' யு.எஸ். மீதான ரஷ்யர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது '
ஈரான் கலவரம் : பிரிட்டன் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை
பாதுகாப்பு நிலை : இலங்கை இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தில் ஆய்வு
ஓரினச் சேர்க்கை : டெல்லி நீதிமன்ற தீர்ப்புக்கு நேபாளத்தில் வரவேற்பு
பத்தாயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் : இங்கிலாந்து எச்சரிக்கை
சீனா எமது வாழ்நாள் நண்பன்: இலங்கை