முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > ' ஏர் பிரான்ஸ் விமானம் நடுவானில் நொறுங்கவில்லை'
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
' ஏர் பிரான்ஸ் விமானம் நடுவானில் நொறுங்கவில்லை'
228 பேரை பலிகொண்ட ஏர் பிரான்ஸ் விமானம் நடுவானில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகவில்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 ரக ஏர் பஸ் ரக விமானம் ஒன்று, 216 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன், ரியோ டே ஜானிரோவிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், அந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 228 பேருமே உயிரிழந்த நிலையில், சடலங்களை தேடும் பணியை முடித்துக் கொள்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய பிரான்ஸ் விசாரணைக் குழு , விபத்துக்குள்ளான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நொறுங்கி விழவில்லை என்றும், விபத்துக்கு வேறு ஏதோ காரணம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த தகவலை மேற்கூறிய விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
' பாக். : தாலிபான் தலைவர் ஃபசுல்லா கொல்லப்பட்டிருக்கலாம் '
ஜாக்சனின் குழந்தைகளை ஒப்படைக்க முன்னாள் மனைவி வழக்கு
ராவல்பிண்டியில் தற்கொலை தாக்குதல் ; 6 பேர் பலி
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
உலக அரங்கில் முக்கிய காரியம் ஆற்றும் நாடாக இந்தியா திகழ்கிறது : யு.எஸ்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த இலங்கை அரசு திட்டம் ?