இராணுவ தாக்குதலில் தாலிபான் இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் மவுலானா ஃபசுல்லா கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது ,ஃபசுல்லா கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் இராணுவம் முற்றுகையிட்டபோது, தனது தளபதிகளுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்த ஃபசுல்லாவின் தொலைபேசியை பாதுகாப்பு படையினர் ஒட்டுக்கேட்டபோது, தப்பிக்கவே வழியில்லாத வகையில் தாம் முற்றுகையிடப்பட்டிருக்கும் தகவலை அவர் தமது தளபதிகளுக்கு தெரிவித்ததாகவும், இதனால் அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று பாகிஸ்தான் இராணுவம் கருதுவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |