பாகிஸ்தானின் முக்கிய நகரான ராவல்பிண்டியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் ராவல்பிண்டியில்தான் அமைந்துள்ளது.இங்கிருந்து இராணுவ பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது., சூர்க் சவுக் என்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் அந்த பேருந்து வந்தபோது,எதிரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் பேருந்து மீது வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில் 6 பேர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் , 20 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ராவல்பிண்டி காவல் துறை தலைமை அதிகாரி நசீர் துர்ரானி தெரிவித்தார்.
மேலும் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமுற்றதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். |