முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > உலக அரங்கில் முக்கிய காரியம் ஆற்றும் நாடாக இந்தியா திகழ்கிறது : யு.எஸ்.
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலக அரங்கில் முக்கிய காரியம் ஆற்றும் நாடாக இந்தியா திகழ்கிறது : யு.எஸ்.
உலக அரங்கில் முக்கிய காரியம் ஆற்றும் நாடாக இந்தியா திகழ்வவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் பேச்சாளர் மைக் ஹேமர் இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :

உலக அரங்கில் முக்கிய காரியம் ஆற்றும் ஒரு நாடாக இந்தியா திகழ்வதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய பங்காற்றுவதாக நாங்கள் ( அமெரிக்கா ) நம்புகிறோம்.

வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜேம்ஸ் ஜோன்ஸ் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அடிக்கடி சந்தித்து முக்கிய பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர்.

இந்தியாவுடனான நட்பை மேலும் ஆழமாக வளர்த்துக்கொள்வதில் ஒபாமா அரசு ஆர்வமாக உள்ளது.

பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் , பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகள் , புவி வெப்பமடைதல், வறுமை ஒழிப்பு , கல்வி மற்றும் சுகாதார நலன் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது தொடர்பாக இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா ஒரு முக்கிய நாடாக இருக்கும் என்று ஒபாமா அரசு கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த இலங்கை அரசு திட்டம் ?
ஜாக்சன் மரணம் : விசாரணைக் குழுவில் மருந்தியல் அமலாக்க அதிகாரிகள்
பாக். : குண்டு வெடிப்பில் 2 போலீஸ் அதிகாரிகள் பலி
13 ஆவது திருத்தம் : சிங்கள கட்சி மிரட்டலுக்கு பணிகிறது இலங்கை அரசு
'இஸ்லாமிய முறைப்படி மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம்'
இலங்கையில் பாலியலில் ஈடுபடுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: ஆஸி. நாளேடு தகவல்