வடமேற்கு பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவல் துறை அதிகாரிகள் 2 பேர் பலியாகினர்.
காவல் துறை அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பெஷாவர் நகருக்கு வெளியே சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை குறிவைத்து சாலை ஓரத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்து சிதறியது.
இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 2 போலீஸ் அதிகாரிகள் பலியாயினர்.
மேலும் பலர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கயூர் அப்ரிடி என்ற மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. |