முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > எண்டேவர் எரிபொருள் கலன் சீரமைப்பு பணி நிறைவு: நாசா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எண்டேவர் எரிபொருள் கலன் சீரமைப்பு பணி நிறைவு: நாசா
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இறுதிப் பயணம் மேற்கொள்ள உள்ள எண்டேவர் விண்கலத்தின் எரிபொருள் கலன் சீரமைப்புப் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

எண்டேவர் விண்கலத்தின் ஹைட்ரஜன் வாயு கொள்கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 2 முறை அதன் விண்வெளிப் பயணம் காலதாமதம் ஆனது. தனது இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் எண்டேவர் விண்கலத்தின் எரிபொருள் கலனில் ஏற்படும் இதுபோன்ற இடர்பாடுகளைத் தவிர்க்க நாசா விஞ்ஞானிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, எண்டேவர் விண்கலத்தில் 2 மில்லியன் லிட்டர் எரிபொருள் (திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜன்) நிரப்பி பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவில் எரிபொருள் கொள்கலனில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என நாசா விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்தனர்.

எண்டேவர் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டப்பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து வருவதால் வரும் ஜூலை 11ஆம் தேதி அது விண்ணில் ஏவப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
காந்தி பிறந்த நாளை கொண்டாட யு.எஸ். நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இன பிரச்னைக்கு தீர்வு : அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு மாத கெடு
கத்தாரில் படகு மூழ்கி 16 இந்தியர்கள் பலி
'இலங்கை படையில் மேலும் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள் '
' போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் '
இலங்கை தடுப்பு முகாமில் 2 தமிழர்கள் சுட்டுக் கொலை