இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 140 ஆவது பிறந்த தினத்தை கொண்டாட வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புளோரிடா என்ற நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வழி மொழிந்து மேலும் 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
உலகம் முழுவதற்கும் விடுதலை மற்றும் நீதியின் அடையாளமாக மகாத்மா திகழ்வதாகவும், அகிம்சை தத்துவத்தை போராட்ட ஆயுதமாக உலக மக்கள் முன்வைத்து அவர்களிடம் செல்வாக்கு செலுத்திய அரசியல் தலைவரான காந்தியின் பிறந்த நாளை சுதந்திரம் மற்றும் நீதியின் நாளாக கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானம் அமெரிக்க அயலுறவு விவகாரங்களுக்கான கமிட்டியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |