முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > கத்தாரில் படகு மூழ்கி 16 இந்தியர்கள் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கத்தாரில் படகு மூழ்கி 16 இந்தியர்கள் பலி
கத்தாரில் படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 இந்தியர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

தோஹாவிலிருந்து 2 கட மைல் தொலைவில் உள்ள எண்ணெய் துறப்பன கிணறு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

அங்கு ஏற்கனவே பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவுவதற்காக சென்ற 35 பணியாளர்களுடன் அந்த படகு கவிழ்ந்து மூழ்கியதாகவும், இதில் 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கத்தாரிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

படகில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 16 பேர் இந்தியர்கள் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் கடலோர பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
'இலங்கை படையில் மேலும் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள் '
' போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் '
இலங்கை தடுப்பு முகாமில் 2 தமிழர்கள் சுட்டுக் கொலை
பாக். : குண்டுவெடிப்பில் ஒருவர் பலி
பெனாசிர் கொலை : ஐ.நா. விசாரணை தொடங்கியது
ஏமன் விமான விபத்து : கருப்பு பெட்டி இருக்குமிடம் கண்டுபிடிப்பு