முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > இந்தோனேஷியக் கப்பல் மூழ்கியது; 250 பேர் பலி?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தோனேஷியக் கப்பல் மூழ்கியது; 250 பேர் பலி?
ஜகார்த்தா: இந்தோனேஷியக் கப்பல் ஒன்று, கடுமையான புயல் காற்றில் சிக்கி கடலில் மூழ்கியது. அதில் இருந்த 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், கப்பலில் இருந்து இதுவரை 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஜகார்த்தாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு சுலாவேஸி கடலில், 250 பயணிகள் 17 கப்பல் ஊழியர்களுடன் இந்த கப்பல் சென்று கொண்டிருந்த போது, கரையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பலில் 18 டன் ரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், கடுமையாக வீசிய புயல் காற்றினால் நடுக்கடலில் தத்தளித்து மூழ்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

பயணிகளில் பெரும்பாலானவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால், 250 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று இந்தோனேஷிய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஏ.ஆர். ரஹ்மானுக்கு `கோல்டன் குளோப்' விருது
புலிகள் தாக்குதலில் 18 படையினர் பலி
இன அழிப்பை நிறுத்துங்கள்: முதல்வருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள்
இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் பலம் உள்ளது: முஷாரஃப்
மும்பைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூச்சல்? கீலானி கேள்வி
ஆனை‌யிறவு ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் ‌பிடி‌யி‌ல் : ம‌கி‌ந்த ராஜப‌க்ச