முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > கராச்சியில் தீ விபத்து: 40 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கராச்சியில் தீ விபத்து: 40 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சேரிப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவுக்கு பின்னர் ஏற்பட்ட இந்தத் தீ விபத்திற்கு காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அப்பகுதியில் விதிமுறைகளுக்குப் புறம்பாக மின்சாரம் எடுக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் சுமார் 12க்கும் அதிகமான குடிசைகள் சாம்பலாயின. விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அபாஷி ஷஹீத் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் குடிசை வாழ் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், ஏராளமானோர் தீயில் சிக்கிக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
காஸா தாக்குதலை உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம்
யு.எஸ். ராக்கெட் தாக்குதல்: அல்கய்டாவின் 2 முக்கிய தளபதிகள் பாகிஸ்தானில் பலி
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் யானையிறவு
ஜப்பானில் சுனாமி பேரலை தாக்குதல்
சரப்ஜித்திற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறைக்கப்படலாம்
கொழு‌ம்பு கோ‌ட்டை‌யி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு