முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > யு.எஸ். ராக்கெட் தாக்குதல்: அல்கய்டாவின் 2 முக்கிய தளபதிகள் பாகிஸ்தானில் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
யு.எஸ். ராக்கெட் தாக்குதல்: அல்கய்டாவின் 2 முக்கிய தளபதிகள் பாகிஸ்தானில் பலி
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ராணுவம் இம்மாதம் நடத்திய தாக்குதலில் அல்கய்டா பயங்கரவாத அமைப்பின் 2 முக்கியத் தளபதிகள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர் பாகிஸ்தானின் மரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், பாகிஸ்தானில் அல்கய்டாவின் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் உசமா அல்-கினி மற்றும் அவரது உதவியாளரான படைத்தளபதி ஷேக் அகமது சலீம் ஸ்வீடன் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவ நடத்திய ராக்கெட் குண்டுவீச்சில் உயிரிழந்ததாக பயங்கரவாத தடுப்பு அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்றும், கடந்த 1998இல் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமெரிக்க புலனா‌ய்வு அமைப்பின் முதன்மை குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

மரியாட் நட்சத்திர விடுதியின் மீது கடந்தாண்டு செப்டம்பரில் நடத்திய தாக்குதல், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் உசாமா அல்-கினி தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் யானையிறவு
ஜப்பானில் சுனாமி பேரலை தாக்குதல்
சரப்ஜித்திற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறைக்கப்படலாம்
கொழு‌ம்பு கோ‌ட்டை‌யி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு
உலகின் வயதான பெண்மணி உயிரிழந்தார்
இந்தியாவிடம் ஆதாரம் வாங்கிக் கொடுங்கள்: அமெரிக்காவிடம் பாக். வலியுறுத்தல்