முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்
காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்றும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் கிழக்குப் பகுதி மீது நேற்றிரவும், இன்று அதிகாலையும் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், கடந்த 13 நாட்களாக நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் இதுவே மிகவும் உக்கிரமான தாக்குதல் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கான் யூனிஸ் பகுதியை நோக்கி இஸ்ரேல் பீரங்கிப் படைகள் முன்னேறி வருவதால் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

போர் நிறுத்தம் தேவை: காஸா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், தற்போதைய சூழலில் போர் நிறுத்தம் மிகவும் அவசியமானது எனக் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அஜ்மல் கஸாப்புக்கு பாகிஸ்தானின் உதவி கிடைக்காது
இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் வீசி பாலஸ்தீனம் தாக்குதல்?
மு‌ம்பை தா‌க்குத‌ல் கு‌ற்றவா‌ளிகளிட‌‌ம் ‌விசாரணை நட‌த்த மா‌ட்டோ‌ம்: எஃ‌ப்.‌பி.ஐ
பசுபதிநாதர் கோயில் விவகாரம்: இந்திய அர்ச்சகர்களை மீண்டும் நியமித்தார் பிரச்சண்டா
வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌‌ல் : 5 பொதும‌க்க‌ள் ப‌லி!
ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: எஃப்.பி.ஐ.