முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > கஸாப் விவகாரம்: ‌பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி நீக்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கஸாப் விவகாரம்: ‌பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி நீக்கம்
மும்பைத் தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் எனத் தெரிவித்த காரணத்திற்காக, அந்நாட்டுப் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை பிரதமர் யூசுப் ரஸா கிலானி பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில், கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை தன்னிடமும் (கிலானி), பிற முக்கிய அரசு தலைவர்களிடம் கூறாமல் நேரடியாக அதனை அறிவித்தது பெரும் தவறு. இதன் காரணமாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹ்மூத் அலி துர்ரானியை பதவி நீக்கம் செய்துள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு பிரதமர் கிலானி அளித்துள்ள பேட்டியில், துர்ரானியின் பொறுப்பற்ற செயல் காரணமாக பாகிஸ்தான் மீதான உலக நாடுகளின் பார்வையும், அரசு கொள்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

துர்ரானியை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியும் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தி‌ன் வரலாறு வ‌ன்‌னி‌யி‌ல் மா‌ற்‌றி எழுத‌ப்படு‌ம்
மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல் : 7 படை‌யின‌ர் ப‌லி
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான்
கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: பாக். ஊடகங்கள்
காஸா மீது தாக்குதல்: இஸ்ரேலிய தலைவர்கள் ஆலோசனை
இந்திய ஆதாரத்தின் மீது உண்மையான புலனாய்வு: பாகிஸ்தான்