முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > காஸா மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பே காரணம்: அதிபர் புஷ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஸா மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பே காரணம்: அதிபர் புஷ்
இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியது பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இதுவே காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலுக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மக்களிடம் வானொலியில் நேற்று உரையாற்றிய போது இதனை தெரிவித்த புஷ், கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளின் நிலையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஏராளமான துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பு இறக்குமதி செய்துள்ளதாகவும் கூறினார்.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே எகிப்து ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தமீறிய ஹமாஸ், அப்பாவி இஸ்ரேல் மக்களை ராக்கெட் குண்டுகள் வீசி கொன்று குவித்ததாகவும், இத்தாக்குதலை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததையும் புஷ் தனது உரையில் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் புஷ் அப்போது கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஹாலிவுட் நடிகர் டிரவோல்டா மகன் வலிப்பு நோய்க்கு உயிரிழந்தார்
பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் முக்கியப் பாதை திறப்பு
இழ‌ப்புகளை‌‌த் த‌வி‌ர்‌க்கவே ‌பி‌ன்வா‌ங்‌கினோ‌ம் : ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்!
‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை‌த் தலைமையக‌ம் அரு‌கி‌ல் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்!
ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தடையை சமாளிக்க பெயரை மாற்றியது ஜமாத்-உத்-தவா
‌கி‌ளிநொ‌ச்‌சியை‌க் கை‌ப்ப‌ற்‌றி‌வி‌ட்டோ‌ம் : ம‌‌கி‌ந்த ராஜப‌க்ச!