முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் பலி
மின்கோரா: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ சோதனைச் சாவடிக்கு அருகே இந்த தற்கொலைத் தாக்குதல் இன்று நடந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், தற்கொலைப்படை பயங்கரவாதி சோதனைச் சாவடியை நெருங்குவதற்கு முன்பாகவே தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததால், இதில் ஒரு ராணுவ வீரர் மட்டுமே காயமடைந்தார்.

ஆனால் அவ்வழியாக சென்று கொண்டிருந்த 2 கார்களில் இருந்த 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
நைஜீரியா கலவரம்: 400 பேர் பலி
பாகிஸ்தான அவசர ஆலோசனை
இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள்?
ஏடன் வளைகுடாவில் 25 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்
இலங்கை நட்சத்திர விடுதிகளில் பாதுகாப்பு தீவிரம்
பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க இ‌‌ந்‌தியாவுட‌‌ன் இணை‌ந்து ‌நி‌ற்போ‌ம்: ஒபாமா!