முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > 123 ஒப்பந்தம்: பிரணாப், ரைஸ் நாளை கையெழுதிடுகின்றனர்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
123 ஒப்பந்தம்: பிரணாப், ரைஸ் நாளை கையெழுதிடுகின்றனர்!
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகுக்கும் 123 ஒப்பந்த வரைவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டு சட்டமாகிவிட்ட நிலையில், அதில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நாளை கையெழுத்திடுகின்றனர்.

இத்தகவலை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்த வரைவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், அதில் அதிபர் புஷ் நேற்று கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட அந்நாட்டு அயலுறவு அமைச்சக செய்திக் குறிப்பு, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையி்ல் நடைபெறும் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸூம் கையெழுத்திடுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்தப் பிறகு நாடாளுமன்றத்தில் அதனை முன்வைத்து அவையின் ஒப்புதலைப் பெறுவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். ஆனால், எந்தவித முன்ன்றிவிப்பும் இன்றி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்திய-ரஷ்ய உறவை அணு சக்தி ஒப்பந்தம் பாதிக்காது!
ஜப்பானிய, 2 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு!
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவுக்கு அபராதம்
அணு சக்தி ஒப்பந்த சட்ட வரைவு: கையெழுத்திட்டார் அதிபர் புஷ்!
நேபாளம்: விமான விபத்தில் 18 பேர் பலி
‌கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 20 படை‌யின‌ர் ப‌லி!