முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > ரஷ்யாவில் 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரஷ்யாவில் 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்!
ரஷ்யா முழுவதும் உள்ள ஆயுத சாலைகளில் இருந்து மாயமான சுமார் 2.15 லட்சம் துப்பாக்கிகளை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக ரஷ்ய உள்துறை அமைச்சர் செர்ஜி பெட்கின் அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த 1991இல் ஆயிரமாக இருந்த காணாமல் போன துப்பாக்கிகளின் எண்ணிக்கை, தற்போது 2 லட்சத்து 15 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனினும், இதற்கு தனது உள்துறை அமைச்சகம் எந்த விதத்திலும் காரணமில்லை எனத் தெரிவித்த அவர், ரஷ்ய ராணுவத்துறையின் மெத்தனமே இத‌ற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அர்மீனியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், நேட்டோ படைகளுக்கு அர்மீனியா ஆதரவு அளிப்பது குறித்து ரஷ்யா கவலை கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
123 ஒப்பந்தம் இப்பொழுது கையெழுத்தில்லை: கோண்டலீசா ரைஸ்!
பம்லாவில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு!
சரப்ஜித் சிங்கை சந்திக்கிறார் பாக். மனித உரிமை அமைச்சர்!
நிலையற்ற பாகிஸ்தான் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல்: பிடென்!
பாகிஸ்தானுடன் தற்போது அணு சக்தி ஒப்பந்தம் இல்லை: அமெரிக்கா!
காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகை!