முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கச்சா எண்ணெய் விலை 140 டாலராக உயர்வு!  Search similar articles
நியூயார்க்: கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களைத் தாண்டியுள்ளது.

நியூ யார்க் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தையில் ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான (முன்பேர ஒப்பந்த) விலை பீப்பாய் ஒன்றுக்கு 140.39 டாலர்களாக அதிகரித்தது. ஆனால் பிறகு சற்றே குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 140.08 டாலர்களாக இருந்தது.

அதேபோல் லண்டன் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 5.74 டாலர்கள் அதிகரித்து 140.05 டாலர்களாக உயர்ந்துள்ளது.

இதே விலை உயர்வு நிலை நீடித்தால் கச்சா விலை நடப்பு கோடைக் காலத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 150 டாலர்கள் முதல் 170 டாலர்கள் வரை உயரும் என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (ஓபெக்) தலைவர் சகீப் கெலீல் தெரிவித்துள்ளார். ஆனால் பீப்பாய்க்கு 200 டாலர்கள் என்ற அதிகபட்ச விலை உயர்வை எட்டாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தங்களது கச்சா உற்பத்தியை குறைக்கப் போவதாக லிபியா கூறியுள்ளது.
மேலும்
வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 பட‌ை‌யின‌ர் ப‌லி!
நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!
கூட‌ங்குள‌த்‌தி‌ற்கான எ‌ரிபொரு‌ள் முழுவது‌ம் வழ‌ங்‌கியா‌‌கி ‌வி‌ட்டது: ர‌ஷ்யா!
அய‌ல்நா‌ட்டவரு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது!
இ‌ந்‌தியா‌வி‌ன் அர‌சிய‌ல் நெரு‌க்கடிக‌ள் ‌தீ‌ரு‌ம்: அமெ‌ரி‌க்கா ந‌ம்‌பி‌க்கை!