முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 30 படை‌யின‌ர் ப‌லி!
ம‌ன்னா‌ரி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 30 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

ம‌ன்னா‌ர் கறு‌க்கா‌‌ய்கு‌ள‌ம் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது இ‌ன்று அ‌திகாலை 5.30 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாக‌ப் பு‌தின‌ம் இணைய தள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

ஆ‌‌ர்‌ட்டிலெ‌றி‌க‌ள், மோ‌ர்‌ட்டா‌ர்க‌ள், இய‌ந்‌திர‌த் து‌ப்பா‌க்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ஆயுத‌ங்களுட‌ன் படை‌யின‌ர் தா‌க்குத‌லை மே‌ற்கொ‌ண்டதாகவு‌ம், அவ‌ர்களு‌க்கு ஆதரவாக ‌கி‌பி‌ர் ‌விமான‌ங்க‌ள் கு‌ண்டுகளை ‌வீ‌சியதாகவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

படை‌யின‌ர் மு‌ன்னக‌ர்வு நடவடி‌க்கை‌க்கு எ‌திராக த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் காலை 8 ம‌ணி வரை கடுமையான மு‌றியடி‌ப்பு‌த் தா‌க்குதலை நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌தி‌ல் 30‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் ஏராளமான படை‌யின‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இதுகு‌றி‌த்து படை‌த்தர‌ப்‌பிட‌ம் இரு‌ந்து உடனடியாக‌‌த் தகவ‌ல் எதுவு‌ம் இ‌ல்லை.
மேலும்
புடின் பிரதமர்: ரஷ்ய நாடாளுமன்றம் உறுதி!
‌சி‌‌றில‌ங்கா: 4 மாத‌ங்க‌ளி‌ல் 385 படை‌யின‌ர் ப‌லி!
திபெத் பேச்சுத் தோல்வி- தலாய் லாமா தூதர்கள்!
பா‌கி‌ஸ்தா‌ன்: ரா‌ட் ஏவுகணை‌ச் சோதனை வெ‌ற்‌றி!
நியூயார்க்கில் ஆ‌ப்‌பி‌ரி‌க்க‌ர்க‌ள் ஆர்‌ப்பாட்டம்!
ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரம் அடைந்தது!