முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அதிபர் வேட்பாளர் தே‌‌ர்த‌ல் : பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி!
பெ‌ன்‌சி‌ல்வே‌னியா‌வி‌ல் அமெ‌ரி‌க்க ‌அ‌திப‌ரதே‌ர்த‌லவே‌ட்பாள‌ரதே‌ர்‌வி‌லஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னவே‌ட்பாள‌ரஹ‌ிலா‌ரி ‌கி‌‌ளி‌ண்ட‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

இந்த மாகாணத்தில் இதுவரை வெளியான முடிவுகளில், 54 ‌விழு‌க்காடு வாக்குகளை ஹிலாரி கைப்பற்றியு‌ள்ளா‌ர். அவருக்கு போட்டியாக உள்ள பராக் ஒபாமா 46 ‌விழு‌க்காடு ஆதரவு பெற்றுள்ளார்.

இ‌ந்த வெற்றி குறித்து ஹிலாரி கூறுகையில், "இந்தப் போட்டியில் இருந்து விலகிட வேண்டும் என்று சிலர் அறிவுரை கூறினர். ஆனால், அமெரிக்க மக்களுக்கு யார் தகுதியுடைய அதிபர் என்பது தெரியும்" என்றார்.

பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றாலும், இல்லினாய்ஸசெனட்டராஇருந்துவருமகரு‌ப்‌பின‌த்தவராஒபாமதொடர்ந்து முன்னிலையிலஇருந்தவருகிறார்.

இதுவரை 1,648 பிரதிநிதிகளின் ஆதரவினை ஓபாமா த‌க்க வை‌த்து‌ள்ளா‌ர். ஆனா‌ல் ஹிலாரிக்கு 1,509 பிரதிநிதிகளின் ஆதரவு ம‌ட்டுமே கிடைத்துள்ளது.

ஜனநாயக கட்சியின் வேட்பாளா‌ர் அ‌திப‌ர் தே‌‌ர்தலு‌க்கு போட்டியிடுவதற்கு அக்கட்‌சி‌யி‌ன் 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
ஆஃ‌ப்க‌னி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் கட‌த்த‌ல்!
ஈரா‌க்‌கி‌ல் ராணுவ‌த் தா‌க்குத‌லி‌ல் 40 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
‌‌திபெ‌த் ‌விவகார‌த்தை‌த் ‌தீ‌ர்‌க்க அமெ‌ரி‌க்கா உதவவே‌ண்டு‌ம்: தலா‌ய் லாமா!
ஈரானை உருத்தெரியாமல் அழிப்பேன் - ஹிலாரி ஆவேசம்!
ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷியா வருகை!
‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை கு‌ண்டு‌வீ‌ச்சு: ஒருவ‌ர் ப‌லி!