முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நேபாள் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளே-அமெரிக்கா!
ஆயுத‌ங்களைத் துறந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி நேபாள தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மாவோயிஸ்ட்கள் தங்கள் பட்டியலில் தீவிரவாதிகள் என்ற தகுதியிலேயே நீடிப்பார்களஎன்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க அதிகாரிகளுடன் மாவோயிஸ்ட் தலைவர்கள் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் உதவிச் செய்தி தொடர்பாளர் டாம் கேஸி கூறுகையில், இது ஒரு முக்கியமான கேள்வியென்றும், வன்முறையையும் தீவிரவாதத்தையும் விடுத்து அரசியல் நடைமுறைகளுக்கு மாவோயிஸ்ட்கள் திரும்பியுள்ளனர் என்பது உண்மைதான். இதனால் அந்த அமைப்பைப் பற்றிய மாற்றுப்பார்வைக்கு வாய்ப்பு கூடியுள்ளது என்று கூறியுள்ளார்.

எனினும் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் நேபாளத்தைப் பொறுத்தவரை இந்த சட்டத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. மறு பரிசீலனை செய்யப்படும் என்பது உறுதி. ஆனால் இப்போதைக்கு தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து அந்த அமைப்பை நீக்க முடியாது என்று அவரமேலுமதெரிவித்தார்.
மேலும்
ரஷ்யாவில் மீண்டும் துளிர்விடும் யோகக் கலை!
இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌ரியா‌ர் படுகொலை: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் க‌‌ண்டன‌ம்!
ஆஃப்கன் சண்டையில் 11 தலிபான்கள் பலி!
பெனாசிர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் நிபந்தனை!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் பய‌ங்கரவா‌திகளு‌க்கு எ‌திராக‌ப் போராட உத‌வி: அமெ‌ரி‌க்கா!
சரப்ஜித் தூக்குத் தண்டனை தள்ளிவைப்பு இல்லை: பாகிஸ்தான் அரசு!