முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌த் தடை: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ப‌ரி‌சீலனை!
த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌ப்பது கு‌றி‌த்து ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரசு ‌தீ‌விரமாக‌ப் ப‌ரி‌சீலனை செ‌ய்து வருவதாக ‌சி‌றில‌ங்கா அயலுறவு அமை‌ச்சக‌ச் செயல‌ர் பா‌லித கோக‌ன்ன தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

கட‌‌ந்த வார‌ம் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌ஸ்டீப‌ன் ‌ஸ்‌மி‌த்தை ப‌ர்‌த் நக‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சிய ‌சி‌றில‌ங்க அயலுறவு அமை‌ச்சக‌‌ச் செயல‌ர் பா‌லித கோக‌ன்ன, ‌த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌‌க்க‌த்‌தி‌ற்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் த‌டை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து‌ச் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பா‌லித கோக‌ன்ன, தனது கோ‌ரி‌க்கையை‌த் ‌தீ‌விரமாக‌ப் ப‌ரி‌சீ‌லி‌ப்பதாக ஆ‌‌‌ஸ்‌ட்ரே‌லியா கூ‌றியதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் ‌நி‌தி ‌திர‌ட்ட‌ப்படுவதை‌த் தடு‌ப்பத‌ற்கு அ‌ந்நா‌ட்டு அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ள நடவடி‌க்கைகளை‌த் தா‌ன் பாரா‌ட்டுவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.
மேலும்
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரு‌கி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!
இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர் ‌பிர‌ச்சனையை உ‌ன்‌னி‌ப்பாக கவ‌னி‌க்‌கிறோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
ஒ‌லி‌ம்‌பி‌க் துவ‌க்க‌ விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்பது சா‌த்‌திய‌மி‌ல்லை: பா‌ன் ‌கி மூ‌ன்!
‌‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌ம் அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌‌ம்: வைகோ வ‌லியுறு‌த்த‌ல்!
வட கொரியா ‌மீதான பொருளாதரத் தடை நீட்டிப்பு: ஜப்பான்!
பா‌கி‌ஸ்தா‌ன் வெடி‌விப‌த்‌தி‌ல் 8 பே‌ர் ப‌லி!