முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காட்மாண்டில் 259 திபெத்தியர்கள் கைது!
நேபாளில் உள்ள சீன தூதரக அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 259 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பு‌த்த மதத் தலைவர் தலாய் லாமாவை திபெத்தில் வசிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரியும், திபெத்தில் அமைதி நிலவ வலியுறுத்தியும் ஹத்திஷார் பகுதியில் உள்ள சீன தூதரக விசா பிரிவு மையம் முன்பு திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, 118 பெண்கள் உட்பட 259 பேரை காட்மாண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சர்பேந்திரா கானல் கூறுகையில், "உயர்ந்த சுற்றுச்சுவர் கொண்ட தூதரகத்தின் முன்பு சில போராட்டக் குழுவினர் சுற்று வளைக்கப்பட்டனர். முன்னதாக பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்றார். போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும்
இந்திய நல்லுறவுக்கு காஷ்மீர் தீர்வே அடிப்படை: பாகிஸ்தான்!
ஸ்கார்லெட் உடல் பிரிட்டன் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டது!
மூன்று தவறுகளை செய்துவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்கா!
ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்களை ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம்: மலே‌சிய அர‌சி‌ற்கு அ‌திக‌ரி‌க்கு‌ம் அழு‌த்த‌ம்!
அ‌ல் கா‌ய்டா பய‌ங்கரவா‌‌திகளா‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு ஆப‌த்து: ‌சி.ஐ.ஏ.!
அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் தா‌க்குத‌ல்: 16 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!