முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
லாகூ‌ரி‌ல் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி!
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகர் கிழக்குப் பகுதியில் காவல்துறை விசாரணை அலுவலகக் கட்டடத்தில் இ‌ன்று காலை குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தவிர குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெடரல் விசாரணை கழகத்தின் அதிகாரியான மிர்சா மொஹமத் இந்த குண்டு வெடிப்பு குறித்து கூறுகையில், லாகூர் அலுவலகக் கட்டடத்தின் உட்பகுதியில் உள்ள மின் தூக்கியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சுமார் 12 பேர் பலியாகியதாக தெரிவித்தார்.

குடியிருப்புப் பகுதியில் வைக்கப்பட்ட வெடிகுண்டு பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
மேலும்
பஹ்ரைனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
சி.பி.எஸ்.இ. தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும்: துபாயில் கோரிக்கை!
அமெரிக்கர்கள் மத்தியில் இந்தியா பிரபலமான நாடு!
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 படை‌யின‌ர் ப‌லி!
கொழு‌ம்‌பி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌லி!
மலேசிய பிரதமராக படாவி பதவியேற்பு