முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மேற்கு சுமத்ராவில் கடும் நிலநடுக்கம்!
மேற்கு சுமத்ராவில் இன்று காலை இந்திய நேரம் மணி 8.07ன் படி கடலுக்கு அடியில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் ஏதுமில்லை என்று இந்தோனேஷிய நில நடுக்க ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய உள் நாட்டு நேரம் காலை 9.37 ம‌ணியள‌வி‌ல் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 பு‌ள்‌ளிகளாக பதிவாகியுள்ளது.

மேற்கு சுமத்ரா தீவுகளுக்கு 157 கி.மீ. தொலைவில் உள்ள பைனானுக்கு தென் மேற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கத்தின் மையம் இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும்
ரஷ்ய அதிபர் தேர்தல்: டிமித்ரி வெற்றி!
முஷாரஃப் பதவி விலக மாட்டார்
‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி இ‌ந்‌தியா வருகை!
வ‌ர்‌த்தக உறவை பல‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: ஜ‌ர்தா‌ரி!
ம‌க்களை பயமுறு‌த்த‌ம் ஹ‌ிலா‌ரி: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌ற்று!
சோனியா மிகச் சிறந்தவர் :சர்தாரி புகழாரம்!