“பூமியை தாக்கிய டைனோசர்களின் குசு”

செவ்வாய், 8 மே 2012 (18:31 IST)

dinosour
FILE
பிரம்மாண்ட டைனோசர்களின் குசு(மலக்காற்று) ஒரு காலத்தில் பூமியை பெரும் அளவில் வெப்பமைடைய செய்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் அறிவியலாளரான டேவிட் வில்கின்சன் மற்றும் அவரது நண்பர்கள் இதுக்குறித்த ஆய்வறிக்கையை கரண்ட் பையாலஜி என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

மிகப்பெரிய டைனோசர்கள் வாழ்ந்த சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி அதிக வெப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு டைனோசர்களின் குசு கூட காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

அறிவியலாளர்கள், டைனோசர்கள் வெளியிடும் குசு தன்மை எவ்வளவு என்பதை ஆய்வு செய்தனர்.

அப்போது வாழ்ந்த மொத்த டைனோசர்களிடமிருந்து ஆண்டுக்கு 520 மில்லியன் டன் வாயு உற்பத்தியாகியதாம்.

இதில் மீதேன் வாயு அடங்கி உள்ளதாம்.

பொதுவாக ‘கிரீஹவுஸ் கேஸ்’ எனப்படும் மீதேன் வாயு சூரியனிடமிருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை உடையது.

இதனால், பூமியில் வெப்பம் அதிகரிக்கும்.

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருந்ததாக சில கள் கூறுகின்றன.

ஆனால், உயிரினங்களின் மீதேன் உற்பத்தியால் அத்தகைய புவியின் சுழ்நிலையை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆய்வு பொருளாக வைத்து அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்காக டைனோசரை எடுத்துக்கொண்ட அவர்கள் இந்த அதிர்ச்சி தகவலை நமக்கு கூறுகின்றனர்.

தற்போது, மீதேன் உற்பத்தியானது, வெவ்வேறு இயற்கை பொருட்களிடமிருந்து 500 மில்லியன் டன் ஆண்டொன்றிற்கு கிடைக்கிறதாம்.

ஆனால், வெறும் டைனோசர்கள் மட்டுமே 520மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளன. மேலும், டைனோசர் மட்டுமல்லாமல், மற்ற பொருட்கள் மூலமும் மீதேன் உற்பத்தி நடந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் பாருங்கள்... தற்போதுள்ள வெப்ப அளவை விட சுமார் 150, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று...

Article Summary:
Giant dinosaurs could have warmed the planet with their flatulence, say researchers

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பதவி விலகலை அறிவித்தார்!

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ...

சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்!

தமிழகத்தையும், இலங்கையையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுக்களை ராமர் கட்டிய ...

கருணாநிதியின் சட்டபேரவை பொன்விழா : ஆளுநர் பாராட்டு!

முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டுகள் சட்டப்பேரவை பணியை பாராட்டும் வகையில் தமிழக ...

கங்கை நதியில் பேருந்து விழுந்து 21 பேர் பலியாயினர்!

பாட்னா செல்லும் பயணிகள் பேருந்து ஒன்று கங்கை நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

திருடர்களுக்கு எறும்புகளின் விசக்கடி தண்டனை

பொலிவியாவில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை மக்கள், மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை கடிக்க ...

ஆண்மை குறைவா கவலைவேண்டாம்: வந்துவிட்டது வயாக்ரா ஐஸ் கிரீம்

இங்கிலாந்தை சேர்ந்த ஐஸ் கிரீம் நிறுவனம் வயாகரா மாத்திரையின் 25 மில்லி கிராம் மருந்துடன், சாம்பெய்ன் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் ...

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

BJP election manifesto release

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டது பாரதீய ...

Widgets Magazine