முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல் > சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பெரிய பாதிப்பு இல்லை : கருத்துக் கணிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பெரிய பாதிப்பு இல்லை : கருத்துக் கணிப்பு
சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என ரஷ்யர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பூமியை அச்சுறுத்தும் காரணிகள் பற்றி, ரஷ்ய மக்களிடம் ஓர் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் அமெரிக்க ராணுவத்தினரின் மிரட்டல் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் என 5 சதவீதம் பேரும், வறுமை, குறைந்த வாழ்க்கை தரம் போன்றவை என 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பால் அச்சுறுத்தல் இருப்பதாக 3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

மதுப்பழக்கம், போதை பழக்கம், விலையுயர்வு, பணவீக்கம், லஞ்சம், ஊழல், திருட்டு, கலாச்சார சீர்குலைவு, சமூகச் சிதறல்கள் போன்றவையும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என 3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில், தற்போதைய சுற்றுச்சூழலின் நிலை பாதுகாப்பாற்றதாக இருப்பதாக 49 சதவீதம் பேர் கூறினாலும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்று 9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காற்று, நீர் போன்றவை மாசுபடுவது மிகபெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஆரோக்கிய குறைபாடு என 44 பேர் தெரிவித்துள்ளனர். மோசமான குடிநீர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக 37 சதவீதம் கூறியுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வடமாநிலங்களில் 48 மணி நேரத்தில் வெயில் குறையும்: வானிலை அறிக்கை
சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்
`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்
அதிகரித்து வரும் வெப்பம், தாமதமாகும் மழை, இந்தியா கவலை
கார்பன்-டை ஆக்ஸைடு உயர்வால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பு
நீரை ஆவியாக்கும் ஆகாய தாமரை