முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல் > வடமாநிலங்களில் 48 மணி நேரத்தில் வெயில் குறையும்: வானிலை அறிக்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வடமாநிலங்களில் 48 மணி நேரத்தில் வெயில் குறையும்: வானிலை அறிக்கை
வட மாநிலங்களில் இன்னும் 48 மணி நேரத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்று டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மத்திய பகுதி மற்றும் வடமாநிலங்ளில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மகாராஷ்டிரா உள்ளிட்ட மத்தியப் பகுதிகளில் மழை துவங்கிவிட்ட நிலையில், டெல்லி போன்ற வடமாநிலங்களில் இன்னும் வெயில் சுட்டெரிக்கிறது.

மத்திய பிரதேசத்தின் வடக்குப் பகுதி, வடக்கு ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, சண்டிகர் மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்னும் 48 மணி நேரத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இன்னும் 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதன் பின்னர் உத்தரபிரதேசம் மற்றும் வடமேற்கு மாகாணத்தின பல பகுதிகளில் புயலுடன் கூடிய பலத்த மழையாக வலுவடையும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநில எல்லைகளான புஜ், பரோடா, இந்தூர், கட்டாக், பாலாசோர், பாங்குரா, காங்டோ ஆகிய இடங்களில் பருவமழை தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா, சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் பருவமழை மேலும் வலுவடையும்.

மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் வடமேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்
`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்
அதிகரித்து வரும் வெப்பம், தாமதமாகும் மழை, இந்தியா கவலை
கார்பன்-டை ஆக்ஸைடு உயர்வால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பு
நீரை ஆவியாக்கும் ஆகாய தாமரை
அமெரிக்காவை பாதிக்கும் பருவநிலை மாற்றம்