வெளிப்படையான சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதி 1986ன் படி, சுற்றுச்சூழல் தொடர்பான ஆண்டறிக்கை பொதுமக்கள் பார்வைக்கப்பட வேண்டும் என்பது உள்பட புதிய 4 விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
சமீபத்தில், தனது துறையின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பதவி விலகிய இரு உயரதிகாரிகள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை வெளிப்படையாக நிர்வகிக்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
|