முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பருவநிலை மாற்றம்: சர்வதேச தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கும் இளைஞர்கள்!
இந்தியா, பிரிட்டன் உட்பட 11 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச தலைவர்களுடன் லண்டனில் விவாதித்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய போட்டியில் பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இளம் கிளைமேட் சேம்பியன்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவின் சர்வதேச கிளைமேட் சேம்பியனாக ஜஸ்வந்த் மாதவன் (சென்னை), கரண் சேகல் (டெல்லி), நித்தி பட்டேல் (வதோதரா), அர்ச்சனா ஜெயராமன், ஸ்ருதி, அகஸ்த்யா, முத்தன்னா, ஆன் ரேமாண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் லண்டனில் நடைபெற்று வரும் சர்வதேச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜப்பானின் கோப் நகரில் மே 18 முதல் 26ம் தேதி வரையில் ஜி-8 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டிலும் பங்கேற்கின்றனர். இவற்றில் சர்வதேச தலைவர்களுக்கு காலநிலை மாற்றங்கள், அவற்றின் விளைவுகள், தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கின்றனர்.

பிரிட்டனின் சர்வதேச கிளைமேட் சேம்பியன் ஸ்டெபனி லன்ச் கூறுகையில், "பாரம்பரியமிக்க இளைஞர்கள் சமுதாயாத்திற்காக போராடுபவர்கள். ஆனால், பருவநிலை மாற்றம் உலகளவில் அனைத்து தலைமுறையினராலும் விவாதிக்கப்பட வேண்டும். இந்த விவாதத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் பகிர்ந்துகொள்ளவும், தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் ஒரே ஒரு பூமி மட்டுமே உள்ளது. அதில் இளைஞர்களின் பேச்சு உயர்ந்து ஒலிக்க வேண்டும்" என்றார்.
1 | 2  >>  
மேலும்
வானிலை மாற்றத்தால் 12.5 கோடி பேர் வீடு இழப்பர்!
பனிச் சிகரங்கள் உருகுவது இருமடங்கு அதிகரிப்பு!!
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் உபயோகம்!
வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க சரணாலயம்!
உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
பருவ‌நிலை மா‌ற்ற‌‌ம்: இ‌ந்‌தியா - ‌சீனா முனை‌ப்புட‌ன் செயலா‌ற்ற வே‌ண்டு‌ம்!