முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பருவ‌நிலை மா‌ற்ற‌‌ம்: இ‌ந்‌தியா - ‌சீனா முனை‌ப்புட‌ன் செயலா‌ற்ற வே‌ண்டு‌ம்!
எடு‌க்க‌ப்படு‌ம் கடு‌ம் நடவடி‌க்கைகளை ‌விரைவான பொருளாதார வள‌ர்‌ச்‌சியை‌ப் பெ‌ற்று வரு‌ம் இ‌ந்‌தியாவு‌ம், ‌சீனாவு‌ம் நடைமுறை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பருவ‌நிலை மா‌ற்ற‌ம் தொட‌ர்பான நாடுகளு‌க்கு இடையேயான ஐ.நா. குழு உ‌ள்‌ளி‌ட்ட பல சர்வதேச குழு‌க்க‌ள் அ‌ண்மை‌க் காலமாக தா‌க்க‌ல் செ‌ய்த அ‌‌றி‌க்கைக‌ளில் பய‌ன்படு‌த்‌திய பு‌ள்‌ளி ‌விவர‌ங்க‌ள் அனை‌த்துமே காலாவ‌தியானவை எ‌ன்று‌ம் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது. பருவ‌நிலை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு வரு‌ம் மா‌ற்ற‌ம், நா‌ம் எ‌ந்த அளவு‌க்கு இழ‌ப்புகளை உருவா‌க்கு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்‌ப்பா‌ர்‌த்து இரு‌ந்தோமோ அதை‌விட மோசமான அள‌வி‌ல் உ‌ள்ளதாகவு‌ம் ரா‌ஸ் கா‌ர்ன‌ட் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கா‌ர்பனை உ‌ட்கொ‌ள்ளு‌ம் கட‌ல் ம‌ற்று‌ம் வாயு ம‌ண்டல‌த்‌தி‌ன் ‌திற‌ன் குறை‌ந்து‌ள்ளதாகவு‌ம், இதனா‌ல் பூ‌மி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் கா‌ர்ப‌ன்-டை-ஆ‌க்ஸைடி‌ல் க‌ணிசமான அளவு வரு‌ங்கால‌ங்க‌ளி‌ல் வாய ம‌ண்டல‌த்‌தி‌ல் அ‌ப்படியே த‌ங்‌கி‌விடு‌ம் அபாய‌ம் உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர். செ‌ப்ட‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌‌ல் மே‌ற்கொ‌ள்ள‌ப்பட உ‌ள்ள இறு‌தி ஆ‌‌ய்வு‌க்கு மு‌ன்பு வெ‌ப்ப‌நிலை அளவு, கா‌ர்ப‌ன் அட‌ர்‌த்‌தி‌யி‌ன் த‌ன்மை தொட‌ர்பாக எதையு‌ம் உறு‌தியாக கூற இயலாது எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளன‌ர்.

கா‌ர்ப‌ன்-டை-ஆ‌க்ஸைடு வெ‌ளியே‌ற்ற‌த்தை தடு‌ப்ப‌தி‌ல் ம‌ற்ற நாடுகளை ‌விட ஆ‌ஸ்‌ட்ரே‌லியா கூடுதலாக நடவடி‌க்கைகளை முனை‌ப்புட‌ன் செய‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம். உல‌‌கி‌ன் தெ‌ன் பகு‌திதா‌ன் கடுமையாக பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளாகு‌ம் பகு‌தியாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இ‌ந்த ம‌ண்டலத்‌தி‌ல் உ‌ள்ள இ‌ந்தோனே‌ஷியா, ப‌ப்பு ‌நியு ‌கி‌னியா ஆ‌கிய நாடுகளுட‌ன் சே‌ர்‌ந்து ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா உறு‌தியான நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் பேரா‌சி‌ரிய‌ர் ரா‌ஸ் கா‌ர்ன‌ட் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
<< 1 | 2 
மேலும்
கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு : செ‌ன்கு‌ப்தா!
காற்றாலை மின் உற்பத்தியால் கார்பன் வெளியேற்றம் குறைந்தது!
பாதியாக குறைந்தன புலிகள்! - 'சுற்றுச்சூழலு‌க்கு கேடு'
பே‌ரிட‌ர் மேலா‌ண்மை‌ப் ப‌ணி‌யி‌ல் இளைஞ‌ர்க‌ள்: கேரள அரசு ‌தி‌ட்ட‌ம்!
கார்பனைத் திணிக்கும் முன்னேறிய நாடுகள் – ஐ.நா.
பசுமை தொழில்நுட்பங்களுக்கு உதவ முதலீட்டு நிதி - பிரதமர்!