தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » ஊழல் சுழலில் சோனியா?
முந்தையது|அடுத்தது
- பா.முகிலன்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவில் தொடங்கி, தற்போது தயாநிதி மாறனை வளைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள 2ஜி ஊழல் சுழல், விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

2ஜி ஊழல் விவகாரம் வெடித்த தொடக்க காலத்திலிருந்தே, இந்த ஊழல் காங்கிரஸ் தலைமை மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் நடந்திருக்காது என்று ஒருதரப்பு ஊடகங்கள் அடித்துக் கூறி வந்திருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகிப்போன ஆங்கில ஊடகங்கள், 2ஜி ஊழல் என்றாலே ஆ.ராசா மட்டும்தான் என்பதுபோன்ற ஒரு பிம்பத்தை திரும்ப திரும்ப உருவாக்கியதால் ஏற்பட்ட சவுகரியத்தில், இந்த ஊழலில் தொடர்புடைய அல்லது அந்த ஊழலால் பயனடைந்த முக்கிய அரசியல் புள்ளிகளும், பெரு நிறுவனங்களின் முதலாளிகளும் வசதியாக தங்களை இந்த ஊழலிலிருந்து மறைத்துக்கொண்டனர்.

தற்போது 2ஜி ஊழல் வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வந்தாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வழக்கில் இதுவரை சிக்கியுள்ள ஆ.ராசா, கனிமொழி, சாகித் பால்வா போன்றவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த வழக்கை ஊத்தி மூட காங்கிரஸ் கட்சி துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஊழல் வழக்கில் இந்த அளவுக்கு விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றால், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி தலையீடு மற்றும் கண்காணிப்புதான் காரணம்.அப்படி உச்ச நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லை என்றால், இந்த வழக்கிற்கும் போபர்ஸ் ஊழல்வழக்கு கதிதான் ஏற்பட்டிருக்கும்.

போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சோனியா காந்தியின் உறவினர் ஒட்டாவியோ குட்ரோச்சியை, சிபிஐ-யால் நீதிமன்றத்திடம் பரிந்துரைக்க வைத்து விடுவித்தது போன்றே, 2ஜி வழக்கில் தொடர்புடையவர்களும் விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் உச்ச நீதிமன்றம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருப்பதால்,2ஜி வழக்கை ஊத்தி மூடவும் முடியாமல், அதே சமயம் அதிக நாட்கள் நீடித்துவிடக் கூடதே என்ற தவிப்பிலும் காங்கிரஸ் புழுங்கிக் கொண்டிருக்கிறது.

2ஜி வழக்கு நீடிக்க நீடிக்க, அந்த சுழல் மெல்ல மெல்ல காங்கிரஸ் புள்ளிகள் மற்றும் அமைச்சர்களையும் வளைக்கத் தொடங்கிவிடும் என்ற பதைபதைப்புதான் அதற்கு காரணம்.
முந்தையது|அடுத்தது
மேலும் படிக்க
இதையும் தேடு: 2ஜி ஊழல், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ், ஆராசா, கனிமொழி, சிபிஐ, உச்ச நீதிமன்றம், பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே, பாஜனதா, நிதின்கட்கரி