சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து பூங்கா நகர் இரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் சாலையைக் கடக்கப் பயன்படுத்தும் செண்டல் சுரங்கப் பாதையில் கல் பதிப்பதால் ஏற்படும் தாமதம் பெரும் நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.
காலை 7 மணி முதலே இவ்விரு இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகளால் நிரம்பி வழியும் செண்ட்ரல் சுரங்கப் பாதையில் கல் பதிக்கும் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனை இரவு நேரங்களில் செய்து வருகிறது சென்னை மாநகராட்சி.
இந்த வேலை இரண்டு வாரங்களாக நடந்து வருவதால், ஏதாவது ஒரு பக்கத்தில் மக்கள் நடந்து செல்ல வேண்டும் என்று பணிக்கப்படுகின்றனர். இதனால் சுரங்கப்பாதையில் பெரும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மக்கள் சிரமத்துடன் மெதுவாக - ஏதோ தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் நகர்வதைப் போல - நடந்து செல்ல வேண்டியுள்ளது.
WD
போதாக்குறைக்கு கடந்த சில நாட்களாக மழை பொழிந்துவருவதால் கற்கள் பதிக்கப்படாத இடத்தில் கால் வைக்கும்போது வழுக்கி விடுகிறது. பலர் தடுமாறி விழுகின்றனர்.
நூறு அடிக்கும் குறைவான நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் அதிகமான பணியாளர்களை வைத்து ஒரு இரவில் - அதுவும் விடுமுறை நாளுக்கு முன் நாள் - செய்து முடித்தால் பிரச்சனையின்றி மக்கள் கடந்து செல்வார்கள்.
இந்த அளவிற்கு யோசித்து ஒரு வேலையை செய்யக் கூட சென்னை மாநகராட்சியால் முடியவில்லை என்றால், இவர்கள் எங்கே சிங்காரச் சென்னையை உருவாக்கப் போகிறார்கள்?