எண்ணெய் விலையை பொறுத்தவரை கடந்த 6 மாதங்களில் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரளவிற்கே விலை குறைந்துள்ளது என்றாலும், நல்லெண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 6 மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.70 க்கு விற்ற நல்லெண்ணெய், திடீரென ரூ.70 உயர்ந்து ரூ.140 ஆக உயர்ந்தது. தற்போது ரூ.115க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு காரணம் ஆன் லைன் வர்த்தகமே. இதனை தடை செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் என்று வியாபாரி ஜெகந்நாதன் கூறினார்.
கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை கண்டறிய தமிழ்.வெப்துனியா.காம் சந்தைக்குச் சென்று நேரடியாக விவரங்களைச் சேகரித்தது.
கிழ்கண்ட விலைகள் மொத்த, சில்லறை வியாபாரிகளிடம் நேரடியாக கேட்டு பெறப்பட்டதாகும்.
முதலில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பார்ப்போம்!
விலை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் 6 மாதத்திற்கு முந்தைய விலை)
தேங்காய் எண்ணெய் - 1 லிட். ரூ.66.00 (ரூ.63.00)
கடலை எண்ணெய் - 1 லிட். ரூ.84.00 (73.00)
நல்லெண்ணெய்- 1 லிட். ரூ.115 (70.00) விளக்கெண்ணைய்- 1 லிட். ரூ.60 (63.00)
சூரியகாந்தி எண்ணெய்- 1 லிட் ரூ.71 (81.00)
பாமாயில்- 1 லிட் ரூ.52 (65.00)
|