முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒகேனக்கல் : முதல்வரின் முடிவு நியாயமற்றது!
webdunia photoFILE
காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரிலிருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீ‌ர் அளிக்க துவக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்று தமிழக முதல்வரின் தன்னிச்சையான முடிவு அவசியமற்றது மட்டுமின்றி நியாயமற்றதுமாகும்.

இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு புதிய அரசு அமையும் வரை, ஒரு மாத காலத்திற்கு மட்டும் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறதே தவிர, திட்டம் கைவிடப்படவில்லை என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தன்னிச்சையான இந்த முடிவு எந்த அளவிற்கு அர்த்தமுடையது என்பதை ஒவ்வொரு தமிழரும் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 1998ஆம் ஆண்டே மத்திய அரசின் நீர் வளத்துறையின் ஒப்புதல் பெற்று, ஜப்பானிய வங்கியின் நிதியுதவியுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்திற்கான துவக்க விழா கடந்த பிப்ரவரியில் நடைபெற்றபோது அதற்கு எந்த எதிர்ப்பும் கர்நாடகத்திலிருந்து எழவில்லை. எதிர்ப்பு ஏதும் எழாததற்கு காரணம், அதனால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதே.

ஆனால் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் அம்மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான எடியூரப்பா, திடீரென்று ஒகேனக்கலுக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, ஒகேனக்கல் கர்நாடக்கத்திற்குத்தான் சொந்தம் என்று பிரச்சனை கிளப்பினார். இதற்குப் பிறகே கன்னட அமைப்புகள் இரண்டு தமிழ்நாட்டிற்கு எதிரான போராட்டங்களை பெங்களூருவில் துவக்கின.

தென் கர்நாடகத்தில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பா.ஜ.க. இம்முயற்சியில் ஈடுபட்டது என்பது அந்த மாநில அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் மிகப்பட்டவர்த்தனமாக விமர்சனம் செய்தார். “கன்னட உணர்வைத் தூண்டி, தமிழ்நாட்டிற்கு எதிராக பிரச்சனை செய்தால் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின்படி எடியூரப்பா இப்படி நடந்துகொண்டுள்ளார்” என்று இல. கணேசன் கூறினார்.

எனவே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிரான போராட்டமும், ஒகேனக்கல் எங்களுக்குச் சொந்தம் என்ற போராட்டமும் தேர்தலை கருத்தில் கொண்டு கிளப்பி விடப்பட்டவை என்பது கண்கூடாகத் தெரிந்ததனால்தான், கர்நாடக்கத்தில் எழுந்த எதிர்ப்பிற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

செயல்படத்தவறிய மத்திய அரசு!

இப்படிப்பட்ட அடிப்படையற்ற போராட்டம் கர்நாடகத்தில் துளிர்விட்டபோதே அம்மாநில அரசு தடுத்திருக்க வேண்டும். ஆனால் வேடிக்கைப் பார்த்தது. அதனால்தான் அதன் எதிர் வினையாக தமிழ்நாட்டிலும் கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன.எனவே கர்நாடகத்தில் வன்முறையை கட்டுப்படுத்த தவறியது அம்மாநில அரசின் குற்றம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய அரசு. காரணம், அங்கு நடைபெறுவது ஆளுநர் ஆட்சி.

இந்த நிலையில்தான் இருமாநிலங்களிலும் பிரச்சனை தீவிரமடைந்தது. அப்பொழுதும் இப்பிரச்சனையில் மத்திய அரசு வாய் திறக்கவில்லை. ஏன் வாய் திறக்கவில்லை என்று தமிழக அரசு கேட்கவில்லை. மத்திய அரசு தலையிடவேண்டும் என்று கடிதம் தமிழக முதல்வர் எழுதிய கடித்த்திற்கு மத்திய அரசு என்ன பதில் தந்தது? இதனை முதலமைச்சர் கருணாநிதி நேற்றும், இன்றும் விடுத்த இரண்டு அறிக்கைகளிலும் விளக்கவில்லை.
1 | 2  >>  
மேலும்
ஒகேனக்கல் : மத்திய அரசு மெளனம் சாதிப்பதேன்?
கிராமத்திற்கு ஒரு இடி தாங்கி வேண்டும்!
காங்கிரஸின் முட்டாள்கள் தினச் செய்தி!
பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!
தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!