முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கிராமத்திற்கு ஒரு இடி தாங்கி வேண்டும்!
இவைகள், மின்னலடிக்கும் போது பூமியை நோக்கிவரும் பல ஆயிரம் வோல்ட் சக்தி வாய்ந்த மின்சாரத்தை அப்படியே இழுத்து பூமிக்குள் செலுத்திவிடுகின்றன. இதனால் நகர வாசிகள் பெரும்பாலும் தப்பித்து விடுகின்றனர்.

இந்த வசதி கிராமப் பகுதிகளில் இல்லாததே, நமது கிராம மக்கள் பலர் உயிரிழக்கக் காரணமாகிறது.

கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரேப்பாளையம் என்ற இடத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள சிறிய உணவு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், திடீரென்று மேக மூட்டம் ஏற்பட்டு மழை வரும் சூழல் நிலவியது. அப்பொழுது சற்றும் எதிர்பாராத அளவிற்கு செவியைத் துளைக்கும் சத்தத்துடன் இடி விழுந்தது. நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவகத்திற்கு வெகு அருகிலேயே இடி விழுந்தது. வெளியில் வந்து பார்த்தபோது, அருகிலுள்ள வயல் பகுதியில் விளைந்திருந்த கரும்பு பயிர்கள் கருகிப் போயிருந்தது. அந்த இடத்தில் எவரேனும் இருந்திருந்தாலோ அல்லது சில அடி தூரம் தள்ளி உணவகத்தின் மீது விழுந்திருந்தாலோ... செய்தித் தாள்களில் படத்துடன் வந்திருப்போம்.

கிராம மக்கள் மட்டுமல்ல, அவர்களின் கால்நடைகள் உயிரிழக்கின்றன, தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதமடைகின்றன. இந்த நிலை தவிர்கக் கூடியதே.

ஒவ்வொரு கிராமத்திலும் 100 முதல் 150 அடி உயரத்திற்கு ஒரு கோபுரம் அமைத்து இடி தாங்கியை அமைத்துவிட்டால் போதும், ஏராளமான உயிர்களை காப்பாற்றிவிடலாம். இதற்கென்று தனித் திட்டம் தீட்ட வேண்டியது அவசியமில்லை. ஜவஹர் ரோஜ்கார் யோஜனா அல்லது அண்ணா கிராம மேம்பாட்டுத் திட்டம் போன்ற கிராம தன்னிறைவு‌த் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே இடி தாங்கி கோபுரங்களை அமைத்து விடலாம்.

தமிழக அரசு உடனடியாக இதனை நிறைவேற்றிட வேண்டும். உயிரிழந்த பிறகு நிதியுதவி அளிப்பதைவிட, உயிரிழப்பை தடுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
<< 1 | 2 
மேலும்
காங்கிரஸின் முட்டாள்கள் தினச் செய்தி!
பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!
தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!
சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!