ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.
சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
லாகூர் சதி வழக்கு!
இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களும் வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்க தொழில் தகராறு சட்ட வரைவு ஆங்கில அரசு கொண்டு வந்தது.
இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில் டெல்லி மத்திய சபையில் குண்டு வீசுவது என்று பகத்சிங் கூறிய திட்டம் ஏற்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர். செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம் என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.
பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.
தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
|