இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜ குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் மார்ச் 23, 1931.
ஈடிணையற்ற அந்த சுதந்திர போராளிகளின் நினைவாக அவர்களின் போராட்டம் இங்கு நன்றியுடன் நினைவு கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)
பஞ்சாபில்1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.
நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையரை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் விரட்ட வேண்டும் என்று உறுதியுடன் முடிவெடுத்த இந்த இளைஞர்கள், 1924 ஆம் ஆண்டு சச்சின்தரா நாத் சன்யால் என்ற தேச பற்றாளர் துவக்கிய இந்துஸ்தான் விடுதலை அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த ராம்விகார் ராம் பிரசாத் மிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பஹூல்லா கான், மன்மந்த்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி காக்வோரி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தி அரசு கஜானாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தைக் கொள்ளையடித்தனர். இச்சம்பவம் வெள்ளைய அரசிற்கு பெரும் தலைக் குனிவையும், சவாலையும் ஏற்படுத்தியது.
இதில் ஈடுபட்டவர்களில் சந்திரசேகர ஆசாத் தவிர, மற்ற அனைவரும் பிடிபட்டனர். இதனால் அந்த இயக்கம் முடங்கிவிட்ட நிலையில், நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ், யாஷ்பால் ஆகியோர் 1926ல் லாகூரில் துவக்கினர். மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் பொதுக் கூட்டங்களை இவ்வமைப்பு நடத்தியது.
இதற்காக ராஜ துரோக குற்றம் சாற்றப்பட்ட ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் 1927ல் தூக்கிலிடப்பட்டனர்.
சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற பகத் சிங் (1928)
1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவ ஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
|