முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிரதமரின் திட்டம் விவசாயிகளை விடுவிக்குமா?
நமது நாட்டு விவசாயிகளை கடுமையாக அழுத்திவரும் அதிகமான கடன் சுமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க ஒரு (சிறப்புத்) திட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இந்திய தொழில் - வர்த்தக அமைப்புகள் கூட்டமைப்பின் (FICCI) ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “விவசாயிகளின் கடன் தேவைகள் குறித்து கவனித்து வருகிறோம். 80 விழுக்காடு அளவிற்கு இத்துறையினர் (விவசாயிகள்) நமது முறை சார்ந்த நிதி (வங்கிகள்) அமைப்பிற்கு வெளியே இருப்பதும், அவர்கள் அளவிற்கு அதிகமான கடன் சுமையில் உழல்வதும் தொடரக் கூடாது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சிக்கிறோம். அது விரைவில் நடந்துவிடும் என்று நம்புகிறேன” என்று கூறியுள்ளார்.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது என்றும், அது நமது பொருளாதாரத்திற்கும், அரசியலிற்கும் உகந்ததாகாது என்றும் கூறியுள்ள பிரதமர், விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டில் மிகப் பெரிய ஏற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமரின் பேச்சு, அதிலும் குறிப்பாக இன்னும் இரண்டு வாரத்தில் 2008-09 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

மத்திய அரசு கொண்டு வரப்போகும் அந்தத் திட்டம் நிச்சயம் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஒரு உந்துதலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் நமது நாட்டு விவசாயிகளின் வாழ்வு கடன் சுமை அழுத்தத்தினாலும், பருவ மழை பருவம் தவறி பொழிவதாலும், அப்படிப் பொழிந்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தியதால் உண்டான அழிவினாலும் பெரும் வீழ்ச்சியில் மீள முடியாமல் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றாலும், அவருடைய பேச்சில் ஒரு உறுதியான வாக்குறுதி இல்லாததுதான் ஏமாற்றமளிக்கிறது.
1 | 2  >>  
மேலும்
பால் தாக்ரே வழியில் ராஜ் தாக்ரே!
சேது சமுத்திர திட்டம் புதைக்கப்படும்?
தனியாரிடம் உயர் கல்வி : சரியான வழியா?
கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியதாகிறதா?
சிறப்பு தூக்கு மண்டலம்!
தியாகத்தால் எம்மைக் காத்த மஹாத்மா!