சென்னையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மாநாடு சர்ச்சைக்குறியதாக்கப்பட்டு, அது தமிழக சட்டமன்றத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது கருத்துரிமை தொடர்பான முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.
இலங்கை இனப் பிரச்சனையில் இதற்கு மேல் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு, அங்கு நேரடி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசப் படைகளை எதிர்த்து போர் புரிந்துவரும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் பேசப்படும் பேச்சுளும், விடப்படும் அறிக்கைகளும், நடத்தப்படும் பொதுக் கூட்டங்களும் சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்பட்டு, அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்கின்றது என்ற குற்றச்சாற்றை முதலில் காங்கிரஸ் கட்சியும், தற்பொழுது முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் கூறிவருகின்றன.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, பேசிய பேச்சால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டு அதன் காரணமாக அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது ஒருபுறமிருக்க, அவர் அரசை நோக்கி எழுப்பிய ஒரு கேள்வி ஆழ்ந்த விவாதத்திற்குரியதாகியுள்ளது.
“விடுதலைப் புலிகள் அமைப்பு சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின்படி பயங்கரவாத அமைப்பு. அதனை யார் ஆதரித்து யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம்” என்று உள்ள நிலையில், “விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.
ஒரு அமைப்பின் மீதான தடை, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை ஆகுமா? என்பதே கேள்வியாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவதென்ன?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே கருத்துச் சுதந்திரத்திற்கான உறுதியளிக்கப்பட்டுள்ளது:
“இந்தியாவின் மக்களாகிய நாங்கள், தனியாற்றல் பெற்ற, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியாவை அமைத்து, அதன் மூலம் எமது குடிமக்கள் அனைவருக்கும்;
|