கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் என்னுடைய நண்பர் அண்மையில் நடைப்பெற்ற அம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தமது வாக்கு உரிமையை இந்த முறை காங்கிரசுக்கு பதிலாக பா.ஜ.க. விற்கு சாதகமாக பதிவுச் செய்ததாக எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம் என்னத் தெரியுமா, அவருடைய வீட்டுக் குழாயைத் குளிக்கத் திறந்தால் அதிலிருந்து காற்று வந்ததுதான் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதேப்போல இன்று கைவண்டி, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு வருவாய் காவல் துறையினருக்கு கையூட்டாக அல்லது மாமூலாக கொடுக்க வேண்டிய அவல நிலை தொடரத்தான் செய்கிறது. கிராமத்தில் உள்ள தனது நிலத்துக்கான முறையான, தெளிவான பட்டாவைப் பெறுவதற்கு ஏழை விவசாயி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டிய நிலையுள்ளது.
குப்பத்தில் வாழும் சீக்கிய ஏழைப் பெண், அங்குள்ள அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக செல்லும் போது, அங்கு நிரந்தரமாக ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கத்தான் செய்கின்றது. கிராமத்தில் வசிக்கும் தாய் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் நிரந்தரமாக ஒரு ஆசிரியர் இருந்து தனது பிள்ளைகளுக்கு ஏதோ கொஞ்சம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மேற்கண்டவற்றின் மூலம் ஒரு அரசு எந்த வகையில் சாமானிய மக்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து உள்ளது என்பதை அறிய இயலும். ஆனால் இந்த நிலையில் தான் ஒவ்வொரு அரசுகளும் நிலைத்தடுமாறி தோற்றுப்போகின்றன.
அன்றாட நிகழ்வுகளில் ஒரு அரசு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சூழ்நிலையில், நாட்டில் வாழும் சாமானியனால் என்னதான் செய்யமுடியும். அவன் தனது இயலாமையை, கோபத்தை தேர்தலில் வாக்கு மூலம் வெளிப்படுத்துகிறான். தனது வாக்கு மூலம் ஒரு வகையான அரசியல் போக்கிரிகளை மாற்றி வேறொரு அரசியல் போக்கிரியிடம் அதிகாரத்தை கொடுக்கின்றான்.
சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தை அரசுக்கு எதிரான நிலை. அது வேறொன்றுமில்லை, ஒரு அரசின் அன்றாடத் தோல்விகளுக்கு எதிராக மக்கள் அளிக்கும் தண்டனைத்தான் அது. நம் நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், மாநில, மத்திய அரசுகள் எல்லாம் ஊழல் பணத்தில் திளைத்துக் கிடக்கின்றன. அதனால் உருவான நிர்வாகச் சீர்கேட்டால், தரமான பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர் போன்றவற்றைக் கூட செய்து தர முடியாத நிலையில் இந்த அமைப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் தங்களின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று இப்போது நீங்கள் நினைக்கின்றீர்களா?
ஜனநாயக அமைப்பில் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துவது மிகவும் எளிதான ஒரு காரியம். நம் நாட்டின் அரசாங்கங்களுடன் ஆட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்களைத் தவிர வேறு எந்தவொரு அமைப்பும் நேர்மையற்ற வகையில் கருத்து முரண்பாடுகளுடன் செயல்பட்டது இல்லை. எந்தவொரு அமைப்பும் இது போன்று ஒரு பெரிய ஏமாற்றத்தை நமக்கு தந்ததும் கிடையாது.
நாங்கள் இளம் வயதினராய் இருந்த காலத்தில் பணியாற்றிய இந்திய பொது நிர்வாக பணியில் இருந்தவர்கள் எல்லோரும் இரும்புச் சட்டத்தைப் போல இருந்த நிலைக்கு காரணம் அவர்கள் எல்லாம் இங்கிலாந்து நாட்டின் வழித்தோன்றல்களாக இருந்தனர். இந்தியாவை சரியாக நிர்வகிக்க இங்கிலாந்து ஆட்சியாளர்களால் முடியாமல் போனதற்கு காரணம், அப்போது இந்திய ஆட்சிப் பணி முறை இல்லாததுதான் என்று அந்த காலத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். இன்று நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பவர்களே நமது இந்திய ஆட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
|