முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெப்துனியா.காம் நடத்திய ஆய்வில் பச்சன் குடும்பம் ஆதிக்கம்!
amithab
webdunia photoWD
வெ‌ப்து‌னியா இணையதள‌ம், கட‌‌ந்த 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் தலை‌ச் ‌சிற‌ந்தவ‌ர்க‌ள் யா‌ர் எ‌ன்பது தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ன்லை‌ன் வா‌க்கெடு‌ப்‌பி‌ல் அமிதாப் ப‌ச்ச‌ன் குடு‌ம்பமே வாசக‌ர்க‌ளி‌ன் ஆதரவை‌ப்பெ‌ற்று முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளது.

கட‌ந்த ஆ‌ண்டு உல‌கி‌ன் 7 அ‌திசய‌ங்க‌ளைத் தேர்வு செய்வதற்காக போட்டி போட்டிக்கொண்டு ஆன் லைனில் வாக்கெடுப்பு நடத்தின. உலக அதிசயங்களில் ஒ‌ன்றாக தா‌‌ஜ்மஹா‌ல் தொடர வே‌ண்டு‌ம் எ‌ன்ற ஆர்வத்தில் ஏராளமானோர் அதில் கலந்து கொண்டு போ‌ட்டி போ‌ட்டு‌க் கொ‌ண்டு வாக்களித்து தா‌ஜ்மஹாலை‌த் தே‌ர்வு செ‌ய்தன‌ர்.

ஆனா‌ல் இ‌ந்த 2008 பு‌த்தா‌ண்டு தொட‌க்க‌த்‌தி‌ல் பா‌ர்‌த்தா‌ல் இ‌ந்‌தி ‌திரை‌ப்பட உலக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த அ‌‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள 3 பே‌ர் பெரு‌ம்பாலான ஆ‌‌ன்லை‌ன் வா‌க்காள‌ர்க‌ளி‌ன் மன‌தி‌ல் த‌ங்களு‌க்கெ‌ன்று த‌‌னியான இட‌‌த்தை பெ‌ற்று‌ள்ளது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. வெ‌ப்து‌னியா இணைய‌த்தள‌ம் நட‌த்‌திய 2007 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான தலை‌ச்‌சிற‌ந்தவ‌ர்களை‌த் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் வா‌க்கெடு‌ப்‌பி‌ல் ‌இ‌ந்‌தி ‌திரையுலகை‌ச் சே‌ர்‌ந்த முத‌ல் குடு‌ம்பமான ப‌‌ச்ச‌ன் குடு‌ம்ப‌ம் பெரு‌ம்பா‌ன்மையான இணைய வாசக‌ர்க‌ளி‌ன் வா‌க்குகளை‌ அ‌ள்‌ளி‌ச் செ‌ன்று‌ள்ளது. இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் பல நாடக‌ங்களு‌ம், ப‌ல்வேறு ஏ‌ற்ற‌ங்க‌ள் காண‌ப்ப‌ட்டன.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் ப‌ன்-மொ‌ழி இணைய‌த்தள‌ம் வெ‌ப்து‌னியா.காம். 9 இந்திய மொ‌ழிக‌ளி‌ல் 10 கோடி‌க்கு‌ம் அ‌திகமான இணைய‌த்தள வாசக‌ர்களை‌க் த‌ன்னக‌த்தே கொ‌ண்டு‌ள்ளது. இ‌ந்த அளவு ‌சிற‌ப்புகளைக்‌ கொ‌ண்ட வெ‌ப்து‌னியா, கட‌ந்த 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் இ‌ந்‌திய அர‌சிய‌ல், ‌கி‌ரி‌க்கெ‌ட் உ‌ள்‌ளி‌ட்ட ‌விளையா‌ட்டு‌ப் போ‌‌ட்டிக‌ள், ‌திரை‌ப்ப‌ட‌த் துறை, ‌சிற‌ந்த ‌திரை‌ப்பட‌ங்க‌ள் என ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் தலை‌‌ச்‌சிற‌ந்து ‌விள‌ங்குபவ‌ர்களை‌த் தே‌ர்வு செ‌ய்ய வா‌க்கெடு‌ப்பு நட‌த்‌தியது. இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் வாசக‌ர்க‌‌ள் ‌த‌ங்க‌ள் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு தே‌ர்வு செ‌ய்யு‌ம் வகை‌யி‌ல் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த வா‌க்கெடு‌ப்பு கட‌ந்த ‌டிச‌ம்ப‌ர் 21 ஆ‌ம் தெ‌தி தொட‌ங்‌கி ஜனவரி மாத‌ம் 10 ஆ‌ம் தே‌தி வரை நடை‌ப்பெ‌ற்றது. இ‌வ்வா‌க்கெடு‌ப்‌பி‌ல் கல‌ந்து கொ‌ள்ள க‌ட்டண‌ம் எதுவு‌ம் ‌கிடையாது. இ‌ந்த த‌னி‌த்த‌ன்மை வா‌ய்‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ன் முடிவுக‌ள் இ‌ந்‌தி, த‌மி‌ழ், மலையாள‌ம், ப‌ஞ்சா‌‌பி, க‌ன்னட‌ம், மரா‌த்‌தி, தெலு‌ங்கு, பெ‌ங்கா‌லி, குஜரா‌த்‌தி என வெ‌ப்து‌னியா‌வி‌ன் அனை‌த்து மொ‌ழிக‌ளிலு‌ம் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தே‌ர்த‌ல் வ‌ல்லுந‌ர்களை எ‌ல்லா‌ம் ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ன் ‌வி‌ளி‌ம்பு‌க்கே கொ‌ண்டு செ‌ல்லு‌ம் அள‌வி‌ல் பல முடிவுக‌ள் உ‌ள்ளன. ப‌ச்ச‌ன் குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்த த‌ந்தை, மக‌ன், மருமக‌ள் ஆகிய மூவருமே, த‌ங்களு‌க்கு போ‌ட்டியே யாரு‌ம் ‌கிடையாது எ‌ன்று சொ‌ல்லு‌ம் அளவு‌க்கஇ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் இணைய‌த் தள வாசக‌ர்க‌ளி‌ன் வா‌க்குகளை அ‌திக அள‌வி‌ல் அ‌ள்‌ளி‌ச் செ‌‌ன்று‌ள்ளன‌ர். எ‌ண்‌ணி‌க்கை‌யின் அடி‌ப்படை‌யி‌ல் 4 உறு‌ப்‌பின‌ர் கொ‌ண்ட அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஒருவ‌ர் ம‌ட்டு‌ம் இ‌ந்த வெ‌ற்‌றியை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாம‌ல் போனத‌ற்கு காரண‌ம் அவ‌ர் பெய‌ர் வா‌க்கெடு‌ப்‌பி‌‌ல் இட‌ம் பெறாம‌ல் போனதுதானோ?

வெ‌ப்து‌னியா வா‌க்கெடு‌ப்பு முடிவுக‌ள் கால‌ங்காலமாக சொ‌ல்ல‌ப்ப‌ட்டு வ‌ந்து‌ள்ள பல உ‌ண்மைகளு‌க்கு நேரெ‌திரான கரு‌த்து‌க்களை வெ‌ளி‌ப்படு‌த்‌தியு‌ள்ளது. உதாரண‌த்து‌க்கு, இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ன் முடிவை‌ப் பா‌ர்‌த்த ‌பி‌ன்ன‌ர், ‌திருமண‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் இ‌ந்‌தி ‌‌திரையுலக கதாநாய‌கிக‌‌ளி‌ன் புக‌ழ் பா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று யா‌ர் சொ‌ன்னது எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌கிறது. ‌‌மிக‌ச் ‌சிற‌ந்த நடிகையாக ம‌ட்டும‌ல்ல, நா‌ட்டி‌ன் ‌மிக‌ச் ‌சிற‌ந்த பெ‌ண்ம‌ணிக‌ளி‌ல் தலை‌ச்‌சிறந்தவ‌ர் எ‌‌ன்ற புகழை அ‌திக வா‌க்குக‌ள் பெ‌ற்று ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ப‌ச்ச‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

aish
webdunia photoWD
2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் ‌‌மிக‌ச் ‌சிற‌ந்த பெ‌ண்ம‌ணியாக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ப‌ச்ச‌ன் பா‌தி‌க்கு‌ம் அ‌திகமான வா‌க்குகளை‌ப் பெ‌ற்றதோடு, கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி (17.69 %) , ‌மிக‌ச் ‌சிற‌ந்த காவ‌ல் துறை பெ‌ண் அ‌திகா‌ரி ‌கிர‌ண்பேடி (14.61%), டெ‌ன்‌னி‌ஸ் ந‌ட்ச‌த்‌திர‌ம் சா‌னியா ‌மி‌ர்சா (6.54%), நா‌ட்டி‌ன் முத‌ல் பெ‌ண் குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டி‌ல் (3.54%) ஆ‌கியோரை ‌‌பி‌ன்னு‌க்கு‌த் த‌ள்‌ளி‌வி‌ட்டு முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

இ‌ந்த ப‌ட்டிய‌லி‌ல் ‌அர‌சிய‌லி‌ல் ‌தீ‌ப்‌பிளழம்பை‌ப் போ‌ன்று ஆ‌க்ரோஷமாக செய‌ல்படுபவ‌ர்களாக கருத‌ப்படு‌ம் ம‌ம்தா பான‌ர்‌‌ஜி, ஜெயல‌லிதா, முத‌ல்வ‌ர்களான மாயாவ‌தி, வசு‌ந்தரா ராஜே, ‌ஷிலா ‌தீ‌ட்‌ஷி‌த் ஆ‌கியோரு‌ம் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

‌‌சிற‌ந்த இ‌ந்‌திய நடிகை‌க்கான தே‌ர்‌வி‌லும் 64.4% வா‌க்குகளை‌ப் பெ‌ற்று ஐஸ்வர்யா ராய் முத‌லிட‌த்‌தி‌ல் வ‌ந்து‌ள்ளா‌ர். இவரு‌க்கு அடு‌த்தபடியாக 18.87% வா‌க்குகளை‌ப் பெ‌ற்று ரா‌ணி முக‌ர்‌ஜி இர‌ண்டாவது இட‌த்தை ‌இழுப‌றி‌க்கு ‌பி‌ன்னா‌ல் த‌க்கவை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ந‌ல்லவேளை 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் கவ‌ர்‌ச்‌சியான நடிகை‌க்கான தே‌ர்‌வி‌ல் வா‌க்காள‌ர்க‌ள் ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ப‌ச்சனை‌த் தே‌ர்வு செ‌ய்ய‌வி‌ல்லை. அத‌‌ற்கு ந‌ன்‌றி கூறவே‌ண்டு‌ம். இ‌ந்த‌ப் ‌பி‌ரி‌வி‌ல் 55% வா‌க்காள‌ர்க‌ளி‌ன் ஆதரவோடு ‌பிபாஷா பாசு முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர். தனது இடு‌ப்பு‌க் கவ‌ர்‌ச்‌சியா‌ல் இ‌ந்‌திய இர‌சிக‌ர்க‌ளி‌ன் மனதை‌க் கொ‌ள்ளை‌ கொ‌ண்ட ம‌ல்‌லிகா ஷெராவ‌த் 17.7% வா‌க்குக‌ள் பெ‌ற்று இர‌ண்டாவது இட‌த்‌தி‌‌ற்கு வ‌ந்து‌ள்ளா‌ர்.
  1 | 2 | 3 | 4  >> 
மேலும்
ஜல்லிக்கட்டிற்குத் தடை: நீதிமன்றத்தின் அத்துமீறல்!
ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!
வெ‌ப்து‌னியா ஆ‌ய்வு முடிவு 15 ஆ‌ம் தே‌தி!
வெப்துனியா 2007 ஆய்வு இன்றே கடைசி!
பொ‌ங்கல் ஜ‌ல்லி‌க்க‌ட்டு: இ‌ந்த ஆ‌ண்டு ‌‌‌‌சீ‌றி‌ப்பாயுமா காளை‌க‌ள்?
இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?