முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > வணிகம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டாலர் மதிப்பு 4 பைசா குறைந்தது
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.43/ 40.45 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் ரூ.40.47/40.48.

சிறிது நேரத்திற்கு பின், வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.40.47 முதல் ரூ.40.48 வரை விற்பனையானது.

கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று குறைந்தது.

வங்கிகள் அதிக அளவு டாலரை, விற்பனை செய்வதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனால் மற்ற நாட்டு செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறையும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும்
வணிகர்கள் செலுத்த வேண்டிய பழைய நிலுவை வரி ரூ.99 கோடி தள்ளுபடி: த‌மிழக அரசு!
மா‌னிய விலையில் சமையல் எண்ணெய்: சிதம்பரம்!
உருக்கு, பத்திரி‌க்கை காகிதம் இறக்குமதி வரி குறைப்பு!
வட்டி விகிதம் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி!
டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!
ஏற்றுமதியாளர்களுக்கு குறை‌ந்த வட்டியில் கடன்!