உணவு, வாடகைக்கு கார், பூக்கள், மளிகை சாமான்கள் என ஒரே கிளிக்கில் உங்களைத் தேடி வருமாறு சேவை வழங்கி வரும் ஒரு இணையதளம் ஆர்டர்மாங்கர்.காம்.
அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்ற மென்பொருள் பொறியாளர்களால் இந்த இணையதளம் துவங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்தோமானால் 2 மணி நேரத்தில் அந்தப் பொருள் நம் இடம் தேடி வருகிறது.
பெரிய விருந்துகள், பிரிவு உபசார விழா, திருமண வரவேற்பு மற்றும் வீட்டு விசேஷங்கள் என்று மிகப்பெரிய அளவில் இந்த வர்த்தகச் சேவைகளை இந்த இணையதளம் வழங்கி வருகிறது.
ஹைதராபாத்தில் இது முழு நேர சேவை வழங்கி வருகிறது என்றும் சென்னையில் சில சேவைகளை வழங்கி வருவதாகவும், மேலும் பெங்களூர், பூனா ஆகிய இடங்களிலும் சேவை செய்து வருவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் 4 நகரங்களுக்கு தங்களது சேவைகளை விரிவுபடுத்தவும் ஆர்டர்மாங்கர்.காம் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தக்க சேவை வழங்கும் நோக்கத்துடன் 75 ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டி சாலைகளுடன் ஆர்டர்மாங்கர் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. மளிகை சாமான்களுக்கு ஃபிரெஷ் அட் செய்ன் விற்பனை நிலையத்துடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது.
|