செய்திகள் | தொடர்புகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » தகவல் தொழில்நுட்பம் » செய்திகள் » ஜங்லி.காம் ஆகி அமேசான் இந்தியா வருகிறது (Amazon Makes India Debut With Junglee.Com)
உலகின் மிகப்பெரிய ஆன் - லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான்.காம், இந்தியாவில் இன்று முதல் ஜங்லீ.காம் என்ற பெயரில் அறிமுகம் ஆகிறது.

ஜங்லி.காமில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 14,000 இந்திய மற்றும் பன்னாட்டு பிராண்டுகள் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலைகளை ஒப்பு நோக்கி பரிசீலிப்பதற்கான வசதிகளையும் ஜங்லீ செய்துள்ளது. ஆனால் கொள்முதல் மூன்றாம் நபர் சில்லறை விற்பனையாளர்கள் நெட்-வொர்க் மூலமே செய்ய முடியும்.

இனிமேல் ரீபாக் ஷூக்களையும், மைக்ரோ சாஃப்ட்டிடமிருந்து கணினி தொடர்பான உபகரணங்களையும் துணிமணிகளை ஃபேப் இந்தியாவிடமிருந்தும், பளபள ஹேண்ட் பேக்குகளை ஹைட்சைன் என்ற நிறுவனத்திடமிருந்தும் இனி இந்தியர்கள் நேரடியாக வாங்கலாம்.

கிண்டில் போன்ற சில உருப்படிகளை அமேசான்.காம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஆனால் ஆனால் இதனை அனுப்பும் செலவு பொருளின் விலையை விடவும் அதிகமாகிறது.

இந்தியாவில் இணையதள பயனாளர்கள் குறைவாக இருந்தாலும் ஆன் லைன் வர்த்தகம் ஒரு வளர்ந்து வரும் வர்த்தகமாகும்.

அமேசான் இந்தியாவுக்கு வருகிறது என்பதால் ஏற்கனவே ஆன் லைன் வர்த்த்கத்தில் இருந்து வரும் பிளிப்கார்ட்.காமிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமேசான்.காம் ஊழியர்கள் இருவர் ஆரம்பித்ததுதான் பிளிப்கார்ட்.காம்.
WebduniaWebdunia